×

எலைட் டிராபி டென்னிஸ் அரை இறுதியில் முச்சோவா

ஸுஹாய்: சீனாவில் நடைபெறும் எலைட் டிராபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா முச்சோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் அமெரிக்க வீராங்கனை சோபியா  கெனினுடன் நேற்று மோதிய முச்சோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 14 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் பெத்ரா மார்டிச் (குரோஷியா), அரினா சபலென்கா (பெலாரஸ்)  ஆகியோரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


Tags : Elite Trophy Tennis Half , Elite Trophy Tennis, Muchova
× RELATED பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும்... கோஸ்வாமி ஆதங்கம்