செப்டம்பரில் முடிந்த காலாண்டில் எஸ்பிஐ லாபம் 3 மடங்கு உயர்வு

மும்பை: நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) நிகர லாபம் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டு இதே காலத்தில் பெற்ற நிகர  லாபம் ரூ.945 கோடியைவிட தற்போது ரூ.3,012 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எஸ்பிஐயின் லாபம் இந்த அளவுக்கு உயரக் காரணம், வாராக்கடன் சுமை குறைந்தது மற்றும் சொத்து மதிப்பு உயர்ந்ததுதான் என்று வங்கி வட்டாரங்கள்  தெரிவித்துள்லன. இதனுடைய நிகர வட்டி வருவாய் அல்லது கடன்களுக்கான வட்டி வருவாய்க்கும் டெபாசிட்களுக்கு கொடுக்கப்படும் வட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ.24,600 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில்  பெற்றதைவிட தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், வங்கியின் நிகர லாபம் ரூ.2,290 கோடியாக உயரலாம் என்று  நிபுணர்கள் கணித்து இருந்தனர். ஆனால், அதற்கும் மேல் நிகர லாபம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியின் வாராக்கடன் ரூ.1,61,636 கோடியாக குறைந்துள்ளது.  அதற்கு முந்தைய காலாண்டில் வாராக்கடன் சுமை ரூ.1,68,494 கோடியாக இருந்தது. வஙகி கடன் வழங்கல் 8.43 சதவீதம் அதிகரித்துள்ளது. ்வங்கியின் நிகர லாபம் அதிகரித்துள்ளதால், பங்குச்சந்தையில் எஸ்பிஐ. வங்கியின் பங்குகள் விலை  ஏற்றம் பெற்றது.

Tags : SBI , SBI gains, rises
× RELATED முக்கால் சதவீதம் வரை டெபாசிட் வட்டியை குறைத்தது எஸ்பிஐ