×

எல்லையில் தாக்குதல் இந்திய தூதரிடம் பாக். கண்டனம்

இஸ்லாமாபாத்: எ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததுடன், இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது. இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை  ஏற்படுத்தியுள்ளது. இதனால், காஷ்மீர் மாநில எல்லையில் அந்நாட்டு படைகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் கவுரவ்  அலுவாலியாவுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று சம்மன் அனுப்பியது. அதன்படி நேரில் சென்ற அலுவாலியாவிடம். பாகிஸ்தானின் தெற்காசிய மற்றும் சார்க் அமைப்புகளின் பொது இயக்குனர் முகமது பைசல் கூறுகையில்., ‘கடந்த 24ம் தேதி போர்  நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் சாக்கோட், குய்ரதா பகுதிகளில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 ேபர் ெகால்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் தொடர்ந்து மக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.்,’’ என்று  கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : ambassador ,Pak ,border ,Indian , Border, attack, Indian ambassador, Pakistan
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...