×

இந்தியர்கள் விசா இல்லாமல் பிரேசில் போகலாம்

சாபோலா: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் அதிபராக சமீபத்தில் போல்சோனரா பதவியேற்றார். அப்போது முதல், பல்வேறு நாடுகளுக்கு இவர் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறார். அமெரிக்கா, கனடா, ஜப்பான்,  ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபர்கள், பிரேசிலுக்கு விசா இல்லாமல் வரலாம் என முதலில் அறிவித்தார். சமீபத்தில் சீனாவில் சுற்றுப் பயணம் செய்தபோது, அந்நாட்டு மக்களுக்கும் இந்த சலுகையை அவர்  அறிவித்தார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபர்களுக்கும் இந்த சலுகையை நேற்று அவர் வழங்கினார். இதனால், பிரேசிலுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பு, இந்தியர்களுக்கும் கிடைத்துள்ளது.


Tags : Brazil ,Indians ,Let's Go ,Visa , Indians,visa , Brazil
× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க...