×

கலிபோர்னியாவில் காட்டுத் தீ 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவென தீ பரவி வருவதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணத்தில் லாஸ் ஏஞ்செல்சில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சான்டா கிளாரிடாவில், கடந்த புதனன்று பிற்பகல் காட்டு தீ பற்றியது. மளமளவென தீ பரவியதால் 5 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள காடு தீப்பிடித்து எரிந்து வருகிறது.  முன்னெச்சரிக்கையாக, தீ பரவியுள்ள இடங்களின் அருகில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 500 தீயணைப்பு துறை வீரர்கள்  ஹெலிகாப்டர்கள், ஏர் டேங்கர் விமானங்கள் மூலமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “ காட்டு தீ அதிகமாக எரிந்து வருவதால் அருகே உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் காட்டு தீ பிடித்த  அன்றே 2000 பேர் வெளியேற்றப்பட்டனர். நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு உடனடியாக வெறியேறும்படி உத்தரவிடப்பட்டது. சிவப்பு கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,” என்றனர்.


Tags : California , California, wildfire
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோலின்ஸ்