×

70 லட்சம் ஏலச்சீட்டு பணத்துடன் ஆசாமி ஓட்டம் காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை : தனிப்படை ஐதராபாத் விரைந்தது

சென்னை: செங்குன்றம் பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு நடத்தி ₹70 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தெலங்கானா மாநில தலைநகர்  ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் மங்கலம் (எ) ரவி (48). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றம் பைபாஸ் சாலை சர்ச் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், அந்த பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு  நடத்தி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு முறையாக சீட்டு பணம், தீபாவளி பண்டுக்கான பரிசு பொருட்களை ரவி வழங்கி வந்துள்ளார். இதனால்  அவரிடம் ஏராளமான மக்கள் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இதன் மூலம் அவர் மக்களிடம் ₹70 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டு கட்டியவர்களுக்கு கால் சவரன் மோதிரம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை நேற்று வழங்குவதாக ஏற்கனவே ரவி அறிவித்திருந்தார். ஆனால், அவ்வாறு வழங்காமல், கடந்த 2 நாட்களுக்கு  முன் ரவி மாயமாகியுள்ளார். இதனை அறிந்து பணம் செலுத்திய மக்கள், ரவியின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் ரவி தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள்  செங்குன்றம் காவல் நிலையத்தை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். அதில், ரவி ஐதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரவியை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு விரைந்துள்ளனர்.

Tags : Assamese ,police station ,Special forces ,Hyderabad , 70 lakhs of bidding money, Assamese flow, police station, people blockade
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...