×

ரயில்களில் சென்னை கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் பிடிபட்டனர்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கமாக்யா, கோரமண்டல் எக்ஸ்பிரசில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கமாக்யாவில் இருந்து கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூருக்கு செல்லும்  கமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயில் 5வது நடைமேடையில் வந்து நின்றதும், அதில் இருந்து இறங்கி நடந்து வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின்  அடிப்படையில் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.  அதில், அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், போலீசார் அவர்களது உடமைகளை வாங்கி சோதனை செய்தபோது அதில் 30 கிலோ கஞ்சா  பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியை சேர்ந்த ஜலில் கான் (32), ஜெஹேருல் இஸ்லாம் (24) ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, 30 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவுராவில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 5 மணி நேரம் கால தாமதமாக வந்தது. அந்த ரயிலில் வந்து இறங்கி 9வது நடைமேடையில் நடந்து சென்று  கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனர். மேலும் அவரது உடமைகளை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 7 பொட்டலங்களில் தலா 2 கிலோ கஞ்சா இருப்பது  தெரியவந்தது. விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபுரம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும்  போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

„ செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலையில் சுகுமார் (46) என்பவரின் செல்போன் ரீசார்ஜ் மற்றும் லாரி புக்கிங் அலுவலகத்தின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ₹56 ஆயிரம், 3 செல்போன்கள் மற்றும் ஒரு சவரன் மோதிரத்தை மர்ம  நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். „ புளியந்தோப்பு 2வது தெருவை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் செல்வக்குமார் (30), நேற்று முன்தினம் இரவு பட்டாளம் மார்க்கெட் அருகே சென்றபோது, இவரை மறித்த 3 பேர் கத்தி முனையில் ஆயிரம்  ரூபாயை பறித்து சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : Chennai , Trains, Chennai, smuggling, ganja
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...