×

புரசைவாக்கம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி 5 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை

சென்னை:  ஓட்டேரி தேவி பவானி எல்லை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமு (46). இவர், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் (38) என்பவரிடம், “நான் தீபாவளி சீட்டு நடத்துகிறேன். மாதம் 1000 வீதம் 12 மாதங்கள்  செலுத்தினால், முதிர்வு காலம் முடிந்ததும் உங்களுக்கு தங்க காசு, இனிப்பு, பட்டாசு தருவேன்” என கூறியுள்ளார். அதன்படி செல்வம் மாதம்தோறும் 1000 வீதம் 12 மாதங்கள் 12,000 செலுத்தியுள்ளார். இதேபோல், புரசைவாக்கம், பட்டாளம்,  ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 32 பேர், ராமுவிடம் தீபாவளி சீட்டு போட்டுள்ளனர். ஆனால், தீபாவளி சீட்டு முதிர்வு காலம் முடிந்தும் சொன்னபடி பொருட்கள் கொடுக்காமல் ராமு ₹5 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓட்டேரி போலீசில் செல்வம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Diwali ,Police investigation ,area ,Purasaikavam , Prosecution, Diwali slip, fraud, police investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை