×

தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் 2155 பேர் பலி

புதுடெல்லி: செப்டம்பருடன் நிறைவடைந்த தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி நாடு முழுவதும் 2,155 பேர் பலியாகி உள்ளனர்.  இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:  கடந்த  செப்டம்பருடன் முடிந்த 4 மாதத்தில், நாட்டில் அதிகளவில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை அறிவித்துள்ளது.  இது கடந்த 1994ம் ஆண்டுக்கு பிறகு பெய்த அதிகபட்ச மழையாகும். இந்த மழையால் ஏற்பட்ட  வெள்ளப்ெபருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களால் நாடு முழுவதும் 2155 ேபர் பலியாகி உள்ளனர். 45 பேர் காணாமல் போயுள்ளனர். 803 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தவிர, 20 ஆயிரம் கால்நடைகள்  பலியாகி  உள்ளனஜ. 2.23 லட்சம் வீடுகள் முழுமையாகவும், 2.06 லட்சம் வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. 14.09 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின.   இவ்வாறு அவர்கள் கூறினர்.Tags : Southwest , Southwest monsoon rains kill 2155 people
× RELATED தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை...