×

கோவா அருகே புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 32 பேர் கதி என்ன?

நாகர்கோவில்: குமரி மாவட்ட மீனவர்கள் கேரளா, கர்நாடகம், கோவா போன்ற மேற்கு  கடலோர பகுதிகளில்தான் மீன் பிடிக்க செல்வார்கள். அதன்படி, ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கேரள மாநிலம் பேய்ப்பூரில் இருந்து மீன் பிடிக்க சென்ற பல்லக்கு மற்றும் கரிஷ்மா என்ற விசைப்படகுகளில் 35 தமிழக, கேரள மீனவர்கள் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் சூறைக்காற்றில் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மதியம் கரிஷ்மா படகின் ஓட்டுனர் ஜார்ஜ், தொலைபேசியில் தொடர்பு கொண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால், இரு படகுகளும் கர்நாடக மாநிலம் கார்வார் மீன்பிடி துறைமுகத்தை நோக்கி வந்து ெகாண்டு இருப்பதாக கூறி உள்ளனர். இன்று அதிகாலையில் துறைமுகத்துக்கு வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த ரஜின்குமார் என்பவருக்கு சொந்தமான எல்ஷடாய் என்ற விசைபடகிலும், சிபு என்பவருக்கு சொந்தமான ஸ்டார் ஆப் சி-2 என்று விசைப்படகில் சென்ற மாதம் 5ம்தேதி கேரளா மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து குமரியை சேர்ந்த 32 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தற்சமயம், கோவா மாநிலம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, புயல் எச்சரிக்கை கிடைத்தவுடன் கோவா கடற்கரையை நோக்கி கரை திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நேற்று மாலை வரை கரை சேரவில்லை. இதனால் 32 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் உள்ளது.

Tags : fishermen ,Goa ,storm ,Kumari , 32 fishermen, caught in a storm , Goa
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...