×

பாஜகவுடன் த.மா.கா. இணைப்பா? வாசன் விளக்கம்

கும்பகோணம்: பா.ஜ.க.வுடன் தமாகா இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார். கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி: ப.சிதம்பரத்திற்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையை செய்துள்ளது. தஞ்சையில் நடந்த பாஜ கூட்டத்தில் எங்கள் கட்சி நிர்வாகி சுரேஷ் மூப்பனார் பங்கேற்றார். கூட்டணி கட்சி என்ற முறையில் அழைப்பு வந்ததால் அவர் பங்கேற்றார். பா.ஜ.க.வுடன் தமாகா இணைக்கப்படும் என வரும் செய்தி வதந்தி. அந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பொழுது போக்காக வாட்ஸ்அப்பில் இதை பரப்புகிறார்கள். தமாகா வளர்ந்து வருகிறது. பா.ஜ.க.வுடன் ஒரு போதும் சேரமாட்டோம். அடுத்த மாதம் திருச்சி, சென்னையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,Vasan ,TMC , TMC with BJP Connection?, Vasan's description
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி