×

5 காசுக்கு பிரியாணி பாணியில் ஏழை, எளியோர் தீபாவளி கொண்டாட 1க்கு சட்டை, 10 ரூபாய்க்கு நைட்டி

சென்னை: வண்ணாரப்பேட்டை  எம்சி ரோட்டில் ஏழை, எளிய மக்கள் தீபாவளியை கொண்டாட 1க்கு  சட்டை மற்றும் 10க்கு  நைட்டி வழங்கப்படுகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு மணிகண்டன் 5வது சந்து பகுதியில் பெருமாள் டெக்ஸ் என்ற துணி கடை உள்ளது. இங்கு காலை 10 முதல் 11 மணி வரை  வடசென்னை பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலும், இலவசமாக துணிகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 1க்கு ஆண்களுக்கு புதிய சட்டையும், 10க்கு பெண்களுக்கு நைட்டியும் வழங்கப்பட்டது.

ஒருநாளைக்கு 50 பேர் வீதம் கடந்த 19ம் தேதி முதல் இந்த ரூ.1க்கான சட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது முதலில் 50 பேருக்கு தொடங்கி இன்று 200 பேருக்கு வழங்கப்பட்டது. பொதுமக்களும் இலவசமாக இல்லாமல் தங்களுடைய பணத்திலேயே துணி எடுக்கிறேன் என்ற எண்ணத்தில் இங்கு ஆடைகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் ஆனந்த் கூறியது: ஏழை மக்களுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது ஆடை வழங்குவதற்கு இதுபோல் செய்தோம். முதலில் 50 பேருக்கு வழங்கினோம். தற்போது அது 200 பேருக்கு வழங்கப்படுகிறது. இது தீபாவளி வரை வழங்கப்படும்  என்றார். 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு நைட்டி வழங்கிய சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய பொருட்கள் சேமிக்க ஊக்குவிப்பு

கடந்த வாரம்  திண்டுக்கல்லில் பழைய பொருட்களை சேமிப்பதை ஊக்குவிக்க 5 காசுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 காசுக்கு டீ சர்ட் ஒரு கடையில் வழங்கப்பட்டது.  இதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏழை எளிய மக்கள் கொண்டாட 1க்கு சட்டையும் ₹10க்கு  நைட்டியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Tags : Poor and Simple Diwali ,nights , T-shirt 1 , celebrate the Poor and Simple ,Diwali nights for 10
× RELATED சிவராத்திரியை முன்னிட்டு,...