×

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை :  தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர்கள்,  உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடந்தது.இதனை  ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் எழுதினர். இதன் முடிவுகளை  ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்நாள், இடம் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Post Graduate, Teacher Examination Results
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...