×

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை; மீட்கும் பணிகள் தீவிரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ளான். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுஜித் வில்சன் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பயன்படுத்தப்படாத ஆழ்துறை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 30 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பதாக தெரிகிறது.

ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் குழந்தையை மீட்க அவசர மீட்பு குழுக்கள் திருச்சி, மற்றும் மதுரையில் இருந்து மணப்பாறை வந்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்தும் குழந்தையை மீட்க அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். மதுரையில் மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்க தீயணைப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

குழந்தையை மீட்க மதுரையில் இருந்து சிறப்புக் கருவியை கொண்டுவர உத்தரவிட்டுள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தையை உயிருடன் மீட்கும்வரை தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும், மருத்துவக் குழு சம்பவ இடத்தில் இருக்கவும், மருந்து, உபகரணங்களை தயார்நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

திருச்சி மாவட்ட ஆட்சியர்

ஆழ்துளை கிணறு வைத்துள்ள தனியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத்துறை தகவல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Trichy ,district ,Manapparai ,Deepwater Well ,Mannar , Trichy, Mannar, Deepwater well, 2 year old child
× RELATED திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை