×

'அதிமுகவில் சேர வரவில்லை; இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன்': புகழேந்தி பேட்டி

சேலம்: சேலத்தில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமமுகவை சேர்ந்த பெங்களூரு செய்தித்தொடர்பாளர் புகழேந்தி இன்று சந்தித்தார். டிடிவி தினகரனோடு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், முதல்வரை சந்தித்து பேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிடிவி தினகரனுக்கு எதிராக அவர் பேசிய விடியோ வெளியான நிலையில், அதிருப்தியில் இருக்கும் புகழேந்தி, அதிமுகவில் இணைய உள்ளார் என்பது போன்ற தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது, தான் அதிமுக-வில் இணைவதற்காக வரவில்லை. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வந்ததாக கூறியுள்ளார்.

மேலும், முதல்வருக்கு தீபாவளி இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சசிகலா சிறைக்கு சென்றபோது ஆட்சி, அரசு அதிகாரம் மற்றும் கட்சியை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டுப் போனார். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த குந்தகமும் இல்லாமல் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வீறு நடை போடுகிறார்கள் என்று புகழாரம் சூட்டினார். அப்போது அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுகவில் இணைவதாக இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சேர்வேன் என்று கூறினார். முதல்வர் பழனிசாமி, தனது 35 ஆண்டுகாலமாக எனது நண்பர் என்றும் அதன் காரணமாக அவரை சந்திக்க வந்ததாவும் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,by-election ,Prachandi. , Amamuka, EDITORIAL, interview, AIADMK, Principal, appointment, election, win, greeting
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...