×

இந்தியா -பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் இரு நாடுகள் இடையே சமரசம் செய்து வைக்க தயார் : அமெரிக்கா கருத்து

வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் இரு நாடுகள் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் இரு நாடுகள் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அண்மையில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக பேசியதை அவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் சமரசத்தை ஏற்க மாட்டோம் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டதை அமெரிக்க அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைதி பேச்சும், தீவிரவாதமும் ஒரே நேரத்தில் நிகழாது என்று இந்திய கூறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை பலன் அளிக்காது என்பதை இந்தியாவின் கருத்து என அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார். எனினும் அணு ஆயுத வல்லமை பெற்ற 2 நாடுகள் மத்தியில் பதற்றம் நிலவுவது ஆசிய பிராந்தியதற்கு ஆபத்தானது என்று அவர் தெரிவித்துள்ளார். கர்தார்பூர் பாதை மூலம் இரு நாடுகள் இடையே புதிய தொடர்புகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Tags : India ,Pakistan ,US ,countries , India, Pakistan, US, reconciliation, negotiation, Gardarpur route
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!