×

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்க உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்த நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது நேரடியாக பட்டாசு விற்பனை செய்வது தான் இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் ஆன்லைனில் பட்டாசுகள் விற்பனை செய்யும் நடைமுறை வழக்கத்துக்கு வந்தது. இதன் எதிரொலியால், சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து கடைகள் போட்டு விற்பனை செய்யும் உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, இந்திய பட்டாசு விற்பனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளும் புழங்குவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, பட்டாசு வியாபாரம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு விதியையும் கடைப்பிடிக்காமல் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஷேக் தாவூத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்க இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் இதுகுறித்து வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. இந்நிலையில் ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை விதிக்கப்பட்ட நிலையில் உத்தரவை நிறைவேற்றவில்லை என்று  வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அபபோது ஆன்லைனில் பட்டாசு விற்றால் தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Dawood ,Chennai High Court ,Action. Chennai ,Diwali , Chennai, High Court, Online Fireworks, Fireworks Sales, Diwali, Sheikh Dawood
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...