சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் 2 நாட்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த குறிப்பன்குளத்தைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரும், இவரது மகன் ராஜேஷ் சர்மாவும் விவசாயிகள். கடந்த 2 நாட்களுக்கு முன் தோட்டத்திற்கு சென்ற ராஜேஷ் சர்மா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை நாகலிங்கம் நாசரேத் காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே மாயமான ராஜேஷ்சர்மா தோட்டத்தில் உள்ள கிணற்றில், சம்பவத்தன்று  தவறி விழுந்ததும், மேலும் ஏற முடியாமலும் தவித்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாகலிங்கம் அளித்த தகவலையடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில்  வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தவித்து கொண்டிருந்த ராஜேஷ்சர்மாவை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் ராஜேஷ்சர்மா தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் குதித்தாரா என நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>