×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு அக்.30க்கு ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தந்தையர்களின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோர்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் உட்பட 10 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது. அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனுக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் காவல் முடிந்த நிலையில், தேனி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நவம்பர் ஏழாம் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வெங்கடேசன், தேனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : NEET , NEET, deferred
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...