×

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

நீலகிரி: அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குன்னூர் தாலூக்காவுக்கு உட்பட்ட மேலூர் கோசகட்டியில் உள்ள பழமையான அரசு பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் இந்த சம்பவத்தால கடந்த 22ம் தேதி நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டார்.

அதனை தொடர்ந்து மழை காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கட்டுமானத்துறையில் அனுபவம் பெற்றவர்களை கொண்டு நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் குன்னூர் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.


Tags : State Human Rights Commission ,buildings ,school ,public school buildings ,Nadu. ,Tamil Nadu ,inspection , Tamil Nadu, Government School Building, Inspection, State Human Rights Commission
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...