×

கமல் பற்றி விஷமப் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை: மநீம எச்சரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ், நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக மநீம தலைவர் கமல்ஹாசனின் போட்டோக்களை பயன்படுத்தி, அவரது டிவிட்டர் பதிவு போலவும், டி.வி பிரபலங்கள் சிலருடன் உணவருந்துவது போலவும், சீன அதிபருக்கு கவிதை எழுதியது போலவும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் பிரபலத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே விஷமப் பிரசாரம் செய்து வரும் சிலரது நாகரீகமற்ற செயல்கள் வன்மையான கண்டிக்கத்தக்கது. இனி இதுபோன்ற பொய்யான, தவறான, விஷமத்தனமான தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Kamal Legal ,Kamal , Kamal, vicious propaganda
× RELATED மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை விருதம்பட்டு பகுதியில்