அதிமுக வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை மகத்தான வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம். கூட்டணி தலைவர்கள் வாழ்த்து: வெற்றிக்காக கடுமையாக உழைத்த அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>