×

பள்ளி, கல்லூரிகளில் மதவெறி சக்திகளின் செயல்பாடு மூடி மறைப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:  பள்ளிகள், கல்லூரிகளில் மதவெறி அமைப்புகள் செயல்பாடு இருப்பதாக  பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதியிட்டு கடிதம்  எழுதப்பட்டுள்ளது. இதை கல்வித்துறை அமைச்சர் மறுத்தார். ஆனால் இச் செயல் நடப்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் கடிதம் அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது.  அமைச்சரின் இத்தகைய நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : schools ,colleges ,K. Balakrishnan , School, Colleges, Religious, K. Balakrishnan
× RELATED கனமழை பெய்யும் என்பதால் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரம்