×

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது: எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்):  டைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமநிலைத்தன்மை இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது. இடைத்தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியினரும், தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள். ஆளுங்கட்சியின் வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): இடைத்தேர்தலில்   அதிமுக கூட்டணியின் அதிகாரம், ஆட்சி மற்றும் பணபலம் வெற்றி பெற்றுள்ளது  என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதற்கெல்லாம் ஆட்படாமல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொன்குமார் (தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி):  விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக பெற்றுள்ள வெற்றியானது;  அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி. இது, திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த வகையிலும் பின்னடைவு அல்ல.

Tags : victory ,leaders ,by-election ,Opposition , By-election, AIADMK and opposition leaders
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...