×

ஆவின் பணியாளர்களுக்கு போனஸ் புதிய பால் பொருட்கள் அறிமுகம்

சென்னை: ஆவின் பணியாளர்களுக்கு போனஸ் தொகையை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய பால் பொருட்களை நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.  சென்னை இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 5034 பணியாளர்களுக்கு 7 கோடியே 52 லட்சத்து 62 ஆயிரம் போனஸ் வழங்கப்பட்டது. இதன் அடையாளமாக, நந்தனம் ஆவின் அலுவலகத்தில் 52 பணியாளர்களுக்கு போனஸ் தொகையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று வழங்கினார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய பால் பொருட்களான ஆவின் சாக்லெட், ஆவின் குக்கீஸ், பிரீமியர் தயிர் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டது. 14 கிராம் மில்க் சாக்கோ பைட் 10க்கும், 25 கிராம், டார்க் நட்டி பைட் 20க்கும் விற்பனை செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பட்டர் குக்கீஸ், சால்ட் குக்கீஸ், சாக்கோ குக்கீஸ், கஸ்டர்டு குக்கீஸ், கோகனட் குக்கீஸ், ஓட்ஸ் குக்கீஸ் (சர்க்கரை சேர்க்காதது) என ஆறு வகையான குக்கீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.. இவை 80 கிராம் பாக்கெட்டுகள் 35க்கும், சர்க்கரை சேர்க்காத ஓட்ஸ் குக்கீஸ் விலை 40க்கும் விற்பனை செய்யப்படும். 5 விலையுள்ள பிரீமியர் தயிர் 50 கிராம் பாக்கிங்கும் அறிமுகம் செய்யப்பட்டது.  பின்னர்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ‘‘ஆவின் விற்பனை வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 6300 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகிறோம். 500 இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆயிரம் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும்’’ என்றார்.



Tags : Ava employees. , Aavin Staff, Bonus
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...