×

நகைக்கடை உரிமையாளரை தாக்கி கொள்ளை முயற்சி

தண்டையார்பேட்டை: எழும்பூரை சேர்ந்த சந்தோஷ் என்ற குமாஸ்தா (30), அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை சவுகார்பேட்டையில் இருந்து தனது கடைக்கு தேவையான நகைகளை  வாங்கிக்கொண்டு, பைக்கில் புறப்பட்டார். அப்போது, 8 பேர் கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக அடித்து உதைத்து, நகைகளை பிடுங்கினர். இதனால், அவர் அலறி கூச்சலிட்டார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த யானைகவுனி போலீசார் அங்கு வந்து, 7 பேரை மடக்கி  பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த நவீன் (26), புத்தூரை சேர்ந்த பவன் (28), கொடுங்கையூர் பவானியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (20), அரக்கோணத்தை சேர்ந்த கோபி (25), நன்மங்கலத்தை சேர்ந்த ஆசிக் (25),  பெரம்பூர் அகரத்தை சேர்ந்த வினோத் (29), திருவிக நகர் அன்பழகன் நகரை சேர்ந்த மன்னன் (28) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர்.


Tags : owner. Owner ,jeweler ,robbery , Owner , jewelery, attack ,robbery
× RELATED நீலாங்கரையில் கொள்ளை முயற்சியை தடுத்த போலீசுக்கு காவல் ஆணையர் பாராட்டு