×

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் 50% கட்டண சலுகை

சென்னை: நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு 26 முதல் 28ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 27ம் மற்றும் 28ம் தேதி மெட்ரோ ரயில்களில் 50 சதவீத கட்டண சலுகையில் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் வகையில் அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். அதன்படி வரும் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்களான 27 மற்றும் 28ம் தேதி 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Pre-Diwali Festival ,Metro ,Metro Trains , Pre-Diwali, festival, Metro trains
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...