×

விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலி குடும்பத்தினருக்கு 32 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னையை சேர்ந்தவர் பப்புராஜ். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், பப்புராஜ் கடந்த 13.12.2012 அன்று, சென்னையில் இருந்து  பாண்டிசேரிக்கு  வாகனத்தில், டிரைவருடன் மருந்துகளை எடுத்து சென்றார். ரோசானி காவல் நிலையம் அருகே சென்றபோது, இவர்களது வாகனம், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் டிரைவர் மற்றும் பப்புராஜ் இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர்.இதனால், கணவரை இழந்த வசந்தகுமாரி, மைனர் குழந்தைகள் 2 பேர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, பப்புராஜ் மேனேஜராக வேலை செய்து வந்ததும், இதன் மூலம் மாதம் ₹20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்ததும், அவருக்கு 42 வயது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இழப்பு குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாதது, எனவே குழந்தைகள் மீதான பாசம், இழப்பு என அனைத்துக்கும் சேர்த்து, மனுதார்களுக்கு ₹32 லட்சத்து 55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதனை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க  வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.Tags : company manager ,accident , Private company, manager, accident, family
× RELATED கடலூரில் விபத்தில் இறந்த மாலுமியின் குடும்பத்துக்கு 1.92 கோடி இழப்பீடு