×

மெக்சிகோவில் போதை கடத்தல் கும்பல் இடையே துப்பாக்கி சூடு: 9 பேர் பரிதாப பலி

மெக்சிகோ சிட்டி:  மெக்சிகோவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. லாஸ் ரோஜாஸ் மற்றும் அதற்கு எதிரான கும்பல் இடையே பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வருகின்றது. இந்நிலையில் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக நேற்று முன்தினம் கவுர்ரிரோ நெடுஞ்சாலை பகுதியில் ஒன்றுகூடியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் மோதல் வெடித்து,   துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Tags : Mexico ,drug trafficking gang , Mexico drug ,trafficking ,gang , 9 killed
× RELATED மெக்சிகோ நாட்டின் வளைகுடா பகுதியில்...