×

தாயை கோயில்களுக்கு அழைத்து செல்ல வங்கி வேலையை உதறிய மகன் தாயை கோயில்களுக்கு அழைத்து செல்ல வங்கி வேலையை உதறிய மகன்

மைசூரு: இந்தியா முழுவதும் யாத்திரை செல்ல வேண்டும் என்ற தனது தாயின் ஆசையை  நிறைவேற்ற தனது வங்கி வேலையை உதறிவிட்டு, பைக்கில் யாத்திரைக்கு அழைத்துச் சென்றார் அவரது மகன்.மைசூருவை  சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமார். இவர் வங்கியில் வேலைபார்த்து  வந்தார். இவரது தாய் சூடரத்னா (70). கடந்த 2018ம் ஆண்டு சூடரத்னாவிற்கு  புனித யாத்திரைக்கு செல்லவேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது.  இதனை தனது  மகனிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட கிருஷ்ணகுமார் தாயின் ஆசையை  நிறைவேற்ற வங்கி வேலையை உதறிவிட்டு, கடந்த ஓராண்டாக தன்னுடைய 19 ஆண்டு பழைய பஜாஜ் சேடக் ஸ்கூட்டரில் தாயுடன் புனித  பயணத்தை தொடங்கினார். இதுவரை  கிட்டத்தட்ட 25,000 கிமீ வரை இருவரும் பயணித்துள்ளனர்.  கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா,  சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், நேபாளம், பூடான்,  அருணாச்சலப்  பிரதேசம், மேகாலயா மற்றும் திரிபுரா உள்பட தெற்கே உள்ள அனைத்து  மாநிலங்களிலும் உள்ள அனைத்து புனித தலங்களிலும் தரிசனத்தை முடித்துள்ளனர்.  இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனைப்பார்த்து   நெகிழ்ந்த மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா,  கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தாயின் புனித யாத்திரையை எளிதாக்க மஹிந்திரா  கே.யூ.வி 100 என்.எக்ஸ்.டி. கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.  இதுகுறித்து  ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், இவர்களின் பயணம் இனிதாக  அமையட்டும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தாயின் ஆசைக்காக தனது வேலையை விட்டு, ஸ்கூட்டரில் புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணகுமாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.



Tags : bank ,temples son ,temples , Son ,bank, mother , temples
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு