×

நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதமாக சரியும்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5.5 சதவீதமாக குறையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெருளாதார வளர்ச்சி  குறி்த்து பிட்ச் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் கணிப்பு வெளியிட்டிருந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் எனவும், பெரிய நிறுவனங்களுக்கான வரி  குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் சில நடவடிக்கைகள் இதை சாதகம் ஆக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்த அமைப்பு வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

ஆனால், அடுத்த  நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாகவும், அதற்கு அடுத்த ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என கூறியுள்ளது.  ரிசர்வ் வங்கி இந்த மாத துவக்கத்தில் வெளியிட்ட கணிப்பில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக  இருக்கும்  என தெரிவித்திருந்தது. அதை விட குறைவாக பிட்ச் மதிப்பீடு செய்துள்ளது.



Tags : country , economy ,country, 5.5 percent
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!