×

காங்.வேட்பாளர் வெற்றியை தோல்வியாக்கிய அமைச்சர் : பிரியங்கா டுவீட்

உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அழிப்பதற்கு பாஜ முயற்சிக்கிறது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், “பாஜ அகந்தையுடன் செயல்படுகின்றது. காங்கோ வாக்கு எண்ணும் மையத்தில் மக்களின் முடிவை மாற்றுவதற்கு பாஜ முயற்சிக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளை குறைத்து கூறும்படி தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு பாஜ அமைச்சர் 5 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இது ஜனநாயகத்தை இழிவுப்படுத்தும் செயலாகும். இதனால் பாஜ வேட்பாளர் 5,000 ஓட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

டிக்டாக் வேட்பாளர் தோல்வி

அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஆதம்பூர் தொகுதியில் பாஜ சார்பில் டிக்டாக் பிரபலமான சோனாலி போகத் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் குல்தீப் பிஸ்னோய் போட்டியிட்டார். இவர் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் இளைய மகனாவார். குல்தீப், சோனாலியை காட்டிலும் 29,471 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

‘அரசு-மக்கள் இடையே பெரும் இடைவெளி’: பாஜ ஒப்புதல்

பாஜவின் தேசிய பொதுசெயலாளர் விஜயர்வர்கியா கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘அரியானாவில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜ அரசு சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் வாக்காளர்கள் மற்றும் பாஜ அரசுக்கு இடையே சரியான தொடர்பின்றி இடைவெளி உள்ளது. எனவே தான் அரசின் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல முடியவில்லை” என்றார்.

Tags : Priyanka Dwight: Candidate ,Candidate , Priyanka tweet, Candidate's failed
× RELATED நிதின் கட்கரி விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் டிவிட்