×

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பங்கஜா முண்டே உட்பட 7 அமைச்சர்கள் தோல்வி

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் துணை சபாநாயகர் உட்பட  7 அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் 7 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். பர்லி தொகுதியில் பாஜ சார்பில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள்  நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில்  சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்ஜெய் முண்டே ஆகியோர் போட்டியிட்டனர்.  கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தனஞ்ஜெய் முண்டே பார்லி தொகுதியில் வெற்றி  வாகை சூடினார். இதேபோல்  துணை சபாநாயகரும் தோல்வியை தழுவினார். துணை சபாநாயகர் விஜய் பார்னர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலேஷ் லாங்கேயிடம் தோற்றுப்போனார்.

நீர்பாதுகாப்பு அமைச்சர் ராம் ஷிண்டே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ரோஹித்பவாரிடம் தோற்றுப்போனார். பால்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன் கோடேகர் ஜல்னாவில் தோற்றுப்போனார். மற்றொரு சிவசேனா அமைச்சர் விஜய் சிவ்தாரே புரந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப்போனார். பாஜ அமைச்சர் பாலா பகாடே மாவல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுனில் ஷெல்கேயிடம் தோற்றுப்போனார்.
மற்றொரு சிவசேனா அமைச்சர் ஜெய்தத் ஷிர்சாகர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சந்தீப்பிடம் தோற்றுப்போனார். வேளாண்துறை அமைச்சர் தேவேந்திரா மற்றும் அமைச்சர் மதன் ஆகியோரும் தோல்வியை தழுவினர்.

Tags : elections ,ministers ,Maharashtra Assembly ,Pankaja Munde , Maharashtra Assembly elections, 7 ministers , Pankaja Munde fail
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...