×

பாஜ கூட்டணிக்கு 1, காங். கூட்டணிக்கு 1

பீகாரின் சமஸ்திப்பூர் மக்களவை தொகுதியின் லோக் ஜனசக்தி கட்சி உறுப்பினர் ராமச்சந்திர பஸ்வான் உயிரிழந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதி எஸ்சிக்கான ரிசர்வ் தொகுதியாகும். இங்கு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உறவினரும் லோக் ஜனசக்தி வேட்பாளருமான பிரின்ஸ் ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பிரின்ஸ் ராஜ் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
 
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மக்களவை தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி உதயன்ராஜீ போசலே அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இது கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த திங்களன்று இங்கு இடைத்தேர்தல் நடந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சீனிவாஸ் பாட்டீல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பாஜ சார்பில் முன்னாள் தேசியவாத காங்கிரஸ் எம்பியான உதயன்ராஜீ மீண்டும் நிறுத்தப்பட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜ வேட்பாளரை காட்டிலும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் பாட்டீல் முன்னிலை பெற்று வந்தார்.

பிற்பகலில் சீனிவாஸ் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 87 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் உதயன்ராஜி போசலேவை தோல்வியடைய செய்தார். இதனை தொடர்ந்து சீனிவாஸ் படில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார். போசலே முதன் முறையாக 2009ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  கடந்த காலங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் தற்போது பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.

Tags : Baja Alliance 1 ,Bjp Alliance 1 ,Cong. 1 , Bjp Alliance 1, Cong. 1 Alliance
× RELATED காங். சார்பில் ஏர் கலப்பை யாத்திரை