×

கேரளாவில் 5 தொகுதி இடைத்தேர்தல் 3ல் காங். கூட்டணி, 2ல் இடது முன்னணி

திருவனந்தபுரம்: கேரளாவில்  அரூர், மஞ்சேஸ்வரம், கோன்னி, எர்ணாகுளம், வட்டியூர்காவு ஆகிய 5  தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைதேர்தல் நடந்தது. இதில் எர்ணாகுளம், அரூர், மஞ்சேஸ்வரம் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், வட்டியூர்காவு, கோன்னி தொகுதிகளில் இடதுமுன்னணி வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். வட்டியூர்காவு தொகுதியில்  இடதுமுன்னணி வேட்பாளர் பிரசாந்த் 14,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றார். கோன்னி தொகுதியில் இடது முன்னணி  வேட்பாளர் ஜனிஷ்குமார் 9934 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளர் வினோத் 3,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினோத் (காங்)  37,891, மனுராய் (இமு) 34,141, ராஜகோபால் (பாஜ) 13,351 வாக்குகள் பெற்றனர்.

அரூர்  தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானிமோள்உஸ்மான்   2079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஷானி மோள் உஸ்மான் (காங்) 69,356, மனு சி.புளிக்கல் (இ.மு) 67,277, பிரகாஷ் பாபு (பாஜ) 16,289 வாக்குகள் பெற்றனர். மஞ்சேஸ்வரம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி  முஸ்லிம் லீக் வேட்பாளர் கமருதீன் பா.ஜ., வேட்பாளரை 7,923 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கமருதீன் (முஸ்லிம் லீக்) 65,407, ரவிச தந்திரி குண்டார் (பா.ஜ.,) 57,484, சங்கர் ராய் (சிபிஎம்) 38, 233 வாக்குகள் பெற்றனர். மஞ்சேஸ்வரம் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜ  வேட்பாளர் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார்.  இந்த தேர்தலில் 7,923 வாக்குகள் வித்தியாசத்தில் 2ம்  இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : block by-election ,Kerala ,Coalition , 5 block by-election , Kerala, Left Front ,Coalition
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...