×

51 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
* குஜராத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜ.வும், காங்கிரசும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
* ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா செய்த பெஜ்பூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளர்  ரீட்டா சாஹூ  90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் கரிதாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
* உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டபேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
* பீகாரில் 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் சிம்ரிபக்தியாபூர் தொகுதி இடைதேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், கிஷன்கன்ஞ் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். நாத்நகரில் ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றியது.   
* சிக்கிம் மாநிலத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜ 2, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
* பஞ்சாப் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 3  தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் அகாலி தளம் வெற்றி பெற்றது.
* ராஜஸ்தானில் 2 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
* இமாச்சல பிரதேசத்தில் தரம்சாலா, பச்சாத் தொகுதியில் பாஜ வேட்பாளர்கள் விஷால் நேகாரியா, ரீனா காஷ்யப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
* தெலங்கானாஹூசுர்நகர் இடைத்தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் சைதி ரெட்டி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா சட்டமன்ற தொகுதியை இடைத்தேர்தலின் மூலம் பாஜ.விடம் இருந்து காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றி உள்ளது.
* சட்டீஸ்கரில் சித்ரகாட் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்மான் பென்சம் வெற்றி பெற்றார்.
* மேகாலயாவின் ஷெல்லா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், பாஜ கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாலாஜீத் குபார் சின்ரம் வெற்றி பெற்றுள்ளார்.
* அருணாசலப் பிரதேசத்தில் மேற்கு கோன்சா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சகாத் அபோ வெற்றி பெற்றுள்ளார்.
* அசாமில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 3  தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளது.
* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்த காமராஜ் நகர் இடைத்தேர்தலில்  ஆளும் காங். கட் சியை சேர்ந்த வேட்பாளர்  ஜான் குமார் வெற்றி பெற்றார்.
* தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் அதிமுக வெற்றி பெற்றது.

மக்களுக்கு மோடி நன்றி

டிவிட்டரில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், ‘சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வுக்கு வாக்களித்த அரியானா, மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. மக்கள் ஆதரவு எங்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இரு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் பணிவுடன் சேவையாற்றுவோம். தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாஜ, சிவசேனா தொண்டர்களின் முயற்சிகளை பாராட்டுகிறேன். வணங்குகிறேன். அரியானாவில் எங்கள் வாக்கு சதவீதம் 33 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’ என கூறியுள்ளார்.

Tags : Congress ,by-election , Congress , 51-seat by-election
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...