×

மகாராஷ்டிரா, அரியானா முடிவு பாஜவின் தார்மீக தோல்வி காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவு பாஜவின் தார்மீக தோல்வியை காட்டுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலில் அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு எம்பி தொகுதியை கூட கைப்பற்றவில்லை. இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 15 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியிருந்த காங்கிரஸ் தற்போது வெளியாகியுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதேபோல் முந்தைய சட்டப்பேரவை தேர்தலில் 47 தொகுதிகளை கைப்பற்றிய பாஜ தற்போது 40 இடங்களாக குறைந்துள்ளது.

இதேபோல் மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணி குறைந்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பாஜவின் தார்மீக தோல்வி’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா,  குறிப்பிட்டுள்ளார்.


Tags : Maharashtra ,Moral Failure Congress ,Haryana End Baja , Maharashtra, Haryana ,Baja's, Moral Failure Congress opinion
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 6,185 பேருக்கு கொரோனா பாதிப்பு