×

காஷ்மீர் பிடிசி தேர்தல் 98.3% வாக்குப்பதிவு

ஜம்மு:  காஷ்மீரில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்களை தேர்வு செய்வதற்கான (பிடிசி) தேர்தல் நேற்று நடைபெற்றது. முன்னதாக 27 வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று 310 பிடிசிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 22 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் 1065 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 26,629 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை தொடர்ந்து நடைபெற்ற இந்த தேர்தலை காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை புறக்கணித்தன. இந்த தேர்தலில் 98.3 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Tags : PDC ,Kashmir ,election , Kashmir PDC election ,98.3% turnout
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!