எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் தர வரிசையில் இந்தியா முன்னேற்றம்

புதுடெல்லி: எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் தர வரிசை பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் 2020 தர வரிசை பட்டியலை உலக வங்கி நேற்று வெளியிட்டது. இதில், இந்தியா கடந்த ஆண்டு 77வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 14 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 63வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் முதல் 50 இடத்துக்குள் இந்தியாவால் வர இயலவில்லை.

உலக வங்கி, 190 நாடுகளை எளிதாக தொழில் தொடங்கும் நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு தர வரிசை படுத்தி, ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த பட்டியலில் 2014ம் ஆண்டு இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 2017ல் 130வது இடத்துக்கும், 2018ல் 100வது இடத்துக்கும் முன்னேறியது. ஆனால், கடந்த 2005ம் ஆண்டு இந்தியா இந்த தர வரிசையில் 116வது இடத்தில் இருந்தது. தற்போது 14 இடங்கள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சிலவற்றில் தர வரிசையில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது.

Related Stories:

>