×

5 காசுக்கு பிரியாணி, 10 காசுக்கு டி.சர்ட்டையடுத்து 35 பைசாவுக்கு வான்கோழி பிரியாணி

திண்டுக்கல்:  பழைய நாணயங்களை வருங்கால சந்ததிகளுக்கு நினைவு கூரும் வகையிலும், நமது பாரம்பரிய வரலாறு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் திண்டுக்கல்லில் ஏற்கனவே 5 காசுக்கு பிரியாணியும், 10 காசுக்கு டி.சர்ட்டும் வழங்கப்பட்டது. அடுத்து 35 பைசாவுக்கு தள்ளுவண்டிக்காரர் பிரியாணி விற்று அசத்தினார்.  திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே சாலையோர எஸ்கேஎம் தள்ளுவண்டி கடையில், ‘35 பைசாவுக்கு அரை பிளேட் வான்கோழி பிரியாணி அக். 24ம் தேதி வழங்கப்படும்’ என 2 நாளைக்கு முன்பு அறிவித்திருந்தார். முதலில் வரும் 50 பேருக்கு மட்டுமே என நிபந்தனையும் விதித்தனர்.

இதையொட்டி பிரியாணி வாங்க நேற்று காலை முதலே கடை முன்பு ஆண்களும், பெண்களும் குவிய துவங்கினர். முதலில் 50 பேருக்கு அறிவிக்கப்பட்ட வான்கோழி பிரியாணி கூட்டத்தை கண்டதும் எண்ணிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதனால் பழைய 20, 10, 5 பைசாக்கள் என மொத்தம் 35 பைசா கொடுத்து, 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பிரியாணியை வாங்கி சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் சலீம் கூறுகையில், ‘‘பழைய நாணயத்தை மக்கள் மறக்கக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற அறிவிப்பை தெரிவித்தோம். நாங்கள் 50 பேருக்குத்தான் வான்கோழி பிரியாணி அறிவித்திருத்தோம். ஆனால் 100க்கும் மேற்பட்டோர் பழைய நாணயங்களை கொண்டு வந்து பிரியாணி வாங்கி சென்றது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

Tags : Briyani , Briyani ,5 pcs, 10 pcs , 35 pcs
× RELATED சார்... பா.ஜ. பேரணி நடக்க போகுது......