×

ஹரியானா, மராட்டிய மக்கள் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு இதயபூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்: பிரதமர் மோடி

புதுடில்லி : ஹரியானா, மராட்டிய மக்கள் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு இதயபூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியானா, மராட்டிய சட்டமன்றத்துக்கு கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.  இதில், மராட்டியத்தில் ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி மீண்டும் 158 இடங்களுக்கு மேல் வெற்றி முகத்துடன் உள்ளது. இதனால், மராட்டியத்தில் மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைகிறது. அதேபோல், அரியானாவிலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 90 இடங்களில் 40 இடங்களில் பாஜக வெற்றியை நோக்கி செல்கிறது.

காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. அரியானாவில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. ஹரியானா, மராட்டிய தேர்தல் வெற்றியை அடுத்து டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.,நட்டா உள்ளிட்டோர் வருகை தந்தனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சமீபத்தில் நடந்து முடிந்த மகா., ஹரியானா தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. கட்சி தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த வெற்றி முக்கிய அங்கீகாரமாகும். நமது திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை கட்சி தொண்டர்கள் செயல்பட வேண்டும்.

தீபாவளிக்கு முன்னதாக பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை வைத்து வெற்றியை அளித்துள்ளனர். முதல்வர் பட்னாவிஸ்க்கும் ,கட்டாருக்கும் நன்றி. இரு மாநில முதல்வர்களின் தலைமையில் மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடையும். 2010 ம் ஆண்டில் இருந்து இரு மாநிலங்களிலும் செல்வாக்கு பெற்று வருகிறோம். ஹரியானாவில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. 3 சதவீதம் அளவிற்கு வாக்க வங்கி அதிகரித்து உள்ளது. பட்னாவிஸ், கட்டார் ஆகியோர் முதல் முறையாக முதல்வர்களாக பதவியேற்றிருந்தனர் . அவர்களுக்கு அமைச்சர் அனுபவம் இல்லை. இருப்பினும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி 5 ஆண்டு கால ஆட்சி நடத்தி உள்ளனர். மக்கள் மீண்டும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Tags : BJP ,Haryana ,Marathas ,Modi , Haryana, Maratha people, BJP, thank you, PM Modi
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...