×

வெளிநாட்டு பறவைகள் வருகை சரணாலயமாக மாறிய காவல் நிலையம்: ராணிப்பேட்டையில் சிறுவர்கள் பொதுமக்கள் ஆர்வம்

ராணிப்பேட்டை: வெளிநாடுகளில் உள்ள ஏராளமான பறவைகள் தோறும் ஆகஸ்டு மாதங்களில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை வருகிறது. இங்கு இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் தங்கள் நாடுகளுக்கே சென்றுவிடும். அவ்வாறு இந்தாண்டும் வந்துள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை ஒரே வளாகத்தில்  இயங்கி வருகிறது. இங்கு பல ஆண்டுகளாக இலுப்பை மரம், அரசமரம், வேப்ப மரம், குல்மர்க் பூ மரம், அசோக மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த மரங்களில் அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நைட்டிங்கேர்ள் (நீண்ட கால்கள் நீண்ட கழுத்துடன்) பறவைகள், வெண் நிற கொக்குகள், கருப்பு நிற கொக்குகள் மற்றும் நாரைகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தற்போது தஞ்சமடைந்துள்ளன. இந்த பறவைகள் ஆண்டு தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இங்கு வரும். பின்னர் அவை இந்த மரங்களில் கூடு கட்டி சுற்றுப்புற இடங்களுக்கு சென்று இரையை தேடி எடுத்து வருகிறது.

இனப்பெருக்கம் முடிந்து தனது குஞ்சுகள் வளர்ந்தவுடன் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்றுவிடுகிறது. ஆண்டுதோறும் இதேபோல் பறவைகள் வந்து கூடுகட்டி வசிப்பதும் இனப்பெருக்கம் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. தற்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குஞ்சுகள் மரங்களில் இருப்பதால் ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகம் பறவைகளின் சரணாலயம் போல் மாறியுள்ளது. இதையறிந்த அப்பகுதி சிறுவர்கள், பொதுமக்கள் நாள்தோறும் ஏராளமானோர் அங்கு வந்து பறவைகளின் அழகை கண்டு வியக்கின்றனர்.


Tags : Police Visits ,Visit ,Sanctuary: Police Public Interest Foreign Birds ,Boys ,Ranipetta , Foreign Birds, Visit, Ranipetta, Boys, Public, Interest
× RELATED பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும்...