×

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உட்பட நான்கு இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி

டெல்லி: கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் பெருமை மற்றும் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய  நான்கு இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கீழடியில் 5 கட்ட அகழ்வாய்வு பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், 6-ஆவது கட்ட அகழ்வாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் சிவகங்கையில் உள்ள கீழடியில் 5-கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான தொன்மைப் பொருட்கள், வரலாற்றுப் பதிவுகள், பண்டைகால நாகரிகம் உள்ளிட்டவை குறித்து கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.

 சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடியில் நடந்த அகழாய்வில் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை வைத்து தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதனை கீழடியிலேயே நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக தொல்லியல்துறை அக். 23ல் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு சில எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கீழடி நாகரீகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ள நிலையில் பலரும் கீழடியை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

தற்போதைய நிலையில் இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி, கால்வாய் உள்ளிட்டவற்றை மட்டும் கண்டு செல்கின்றனர். அகழாய்வு பொருட்களை காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இந்நிலையில் மதுரையில் மக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக கீழடியிலேயே வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதனால் தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை தொடர மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட பகுதிகள் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Tags : Central Government ,phase ,places ,Adyachanallur ,Tamil Nadu. The Central Government ,Tamil Nadu , Adyashanallur, Excavation, Central Government
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்