×

மதுரை அருகே பல லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு அதிகாரிகள் சீல்

மதுரை: மதுரை அருகே பல லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை அருகே சிலைமானில் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பதிவு எண் கொண்ட இரு கண்டெய்னர் லாரி மதுரையை நோக்கி சென்றது. சந்தேகமடைந்த போலீசார் இரு கண்டெய்னர்களையும் திறந்து சோதனையில் ஈடுபட்டனர்.அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பான்பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்ததும் அவை பெங்களூருலிருந்து சிலைமானில் உள்ள குடோனிற்கு கொண்டுசென்றதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து அதிகாரிகள் குறிப்பிட்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு ஏராளமான குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் இரு கண்டெய்னர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனிற்கு சீல் வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சுதர்சன், கண்டெய்னரை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் திருப்பதி, கோவிந்தன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : Madurai. Madurai , Madurai, several lakhs, tobacco products, kudon, authorities, sealed
× RELATED காவல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் கொண்டாட்டம்