×

கல்கி பகவான், அவரது மகன் மற்றும் ஆசிரமத்தின் கணக்காளர் உள்ளிட்டோரிடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

டெல்லி: கல்கி பகவான், அவரது மகன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலவாணி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் கல்கி ஆசிரமத்தின் கணக்காளர் உள்ளிட்டோரிடம் விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது. கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டதால் கல்கி சாமியாரை அமலாக்கத்துறை விசாரிக்க திட்டமிட்டிருந்தனர். கல்கி சாமியாரின் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு முக்கிய காரணம் ஆசிரமத்திலிருந்து ஏராளமான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதே காரணம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் உள்ள கல்கி சாமியாரின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனுடைய மதிப்பு ரூ.20 கோடி என ஏற்கனவே வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்த அளவுக்கு சட்ட விரோதமாக வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்திருப்பதே தவறு என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இவ்வாறு வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்திருப்பதன் மூலம் தவறு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. அடுத்தக்கட்டமாக நாங்களும் இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு பண பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் கல்கி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Kalki Bhagwan ,accountant ,Enforcement Department. ,investigation , Kalki Bhagwan, his son, ashram's accountant,investigation
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...