×

வங்காளதேச கிரிக்கெட் வீரர்களின் போராட்டம் வாபஸ்: இந்தியாவுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடர் போட்டி உறுதி

டாக்கா: வங்காளதேச கிரிக்கெட் வீரர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இந்தியாவுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடுவது உறுதியானது. கடந்த இரண்டு நாட்கள் முன்பு வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மக்மதுல்லா உள்ளிட்டோர், வங்கதேச தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் 13 அம்ச கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர். அதில், சம்பள உயர்வு, பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரை உரிமையாளர்கள் கொண்டு நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர். வீரர்கள் ஸ்ட்ரைக்கில் குதித்ததால் உள்ளூர் முதல் தர போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறம், வரும் நவ. 3ம் தேதி முதல் இந்தியா - வங்கதேச டி20 தொடர் நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விவகாரம் இப்படி இருக்க, வங்கதேச கிரிக்கெட் போர்டு இயக்குனர் ஹாசன் கூறுைகயில், ‘இந்த ஸ்ட்ரைக்கை சதியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த சதியின் பின் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்போம். வீரர்கள் இத்தனை கோபமாக, ஏமாற்றமாக இருக்கிறார்கள் என்பதே எங்களுக்கு தெரியாது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளை போர்டு முன் வைத்திருக்கலாம். அவர்கள் நேரடியாக ஊடகங்களை சந்தித்து தாங்கள் கிரிக்கெட் ஆடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். இது பிளாக்மெயில் தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை’ என்றனர். தற்போது கிரிக்கெட் போர்டு அவசர இயக்குனர்கள் கூட்டத்தை டாக்காவில் கூட்டினர். அப்போது, ஸ்டிரைக் அறிவித்த வீரர்களும் பங்கேற்றனர். இருதரப்பு பேச்சுவார்த்தையில் 13 கோரிக்கையில் 9 கோரிக்கை நிறைவேற்றித் தரவுள்ளதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், ஸ்டிரைக் நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டது. அதனால், வங்கதேச அணி இந்தியா வருவது உறுதியாகி உள்ளது.

Tags : fight ,cricketers ,Bangladesh ,series match ,India , Bangladesh Cricketers, Struggle, Return, India
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி