துருக்கி மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நீக்கி உத்தரவு

வாஷிங்டன்: துருக்கி மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பேசும்போது, சிரியாவின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்தம் அமலில் உள்ளதைத் தொடர்ந்து துருக்கி மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படுகிறது என்றார்.

மேலும், அமெரிக்காவுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிராக சிரியாவில் சண்டையிட்ட குர்து படையினருக்கு ஆதரவான அமெரிக்கப் படைகளை வாபஸ் பெற்று அமெரிக்கா ஏமாற்றிவிட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு தங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். குர்து படையினர் சந்தோஷமாக உள்ளனர். குர்து படைகளின் தளபதி மஸ்லூம் அப்தி எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என ட்ரம்ப் கூறினார். துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்ற நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர் மற்றும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது துருக்கி சிரியாவில் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால் அதன் மீதான தடையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நீக்கினார்.

Tags : Trump ,US ,Turkey ,President , Turkey, sanctions, US President, Trump, repeal, order
× RELATED இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர்...