×

நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் சாலை ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில் சீக்கியர்களின் பழமையான குருத்துவாரா உள்ளது. சீக்கிய குவான குருநானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் கர்தார்பூருக்கு வழிபாட்டிற்காக செல்வது வழக்கம். இந்த ஆண்டு குருநானக்கின் 550-வது பிறந்த தினம் வரும் நவம்பர் 12-ல் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சீக்கிய யாத்ரீகர்கள் ஓராண்டுக்கு கர்தார்பூர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இதற்கு வசதியாக பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரா முதல் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த சாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய யாத்ரீகர்கள் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானுக்கு விசா இன்றி சென்று வர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 22ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த சாலை வழியாக வரும் சீக்கிய பக்தர்களிடம் தலா ரூ.1,400 கட்டணம் வசூலிக்கப்போவதாக பாகிஸ்தான் அரசு திடீரென அறிவித்திருந்தது. இதற்கு, மத்திய அரசும் சீக்கிய பக்கதர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கர்தார்பூர் சாலை திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவது தாமதம் ஆனது. இந்த நிலையில், இன்று இந்தியா பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

Tags : India ,road signing ,Pakistan. , India, Pakistan, Kardarpur Road, Agreement, Signature
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!