திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையன் கணேசனுக்கு 6 நாள் போலீஸ் காவல்: ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையன் கணேசனுக்கு 6 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கணேசனுக்கு 7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான வெங்கடேசனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் தொடர்பு உள்ளது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கணேசனிடம் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வரும் 29ம் தேதி கணேசனை மீண்டும் ஆஜர்படுத்த தனிப்படை போலீசுக்கு ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>