×

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: கைதல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தோல்வி

ஹரியானா: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வியை தழுவினார். தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்  கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு  இடையே கடும் போட்டி நிலவியது.

பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169  வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி  தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வருகிறது. பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதனால், ஹரியானாவில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதில் இழுபறி நிலவுகிறது. இதனிடையே ஹரியானாவின் கைதல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வியை தழுவினார். பாஜகவின் லீலா ராமிடம் 567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுப்பினார்.


Tags : Surjivala ,Congress ,assembly election ,party spokesperson ,Haryana , Haryana, Assembly election, Surjivala, defeat
× RELATED சொல்லிட்டாங்க...